வசந்த மணி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' படத்திற்குத் தணிக்கைத்துறை 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. இதையடுத்து வரும் 22ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. ஏற்கெனவே இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 'சுந்தரபாண்டியன்' பாணியில் அனைத்துத் தரப்பினரையும் கவரும் கதையுடன் 'வெற்றிவேல்' தயாராகி இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 29ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்திருந்தது. எனினும் ஒரு வாரம் முன்பாகவே வெளியாக உள்ளது.
சசிகுமார் நடித்த 'வெற்றிவேல் 22ஆம் தேதி வெளியாகிறது
1 mins read
-

