சமந்தாவின் தாயாக நடிக்கும் நதியா

சமந்தாவின் தாயாக நடிக்கும் நதியா

1 mins read
95657615-3abd-4ff2-af55-4c5f0d1934fd
-

தமிழ்ச் சினிமாவில் பல்வேறு நடிகர், நடிகைகளுக்கு அம்மாவாக நடித்துள்ள நதியா, தெலுங்கு படமொன்றில் சமந்தாவுக்கு தாயாக நடிக்க உள்ளார். தென்னக திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா. ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். அவ்வப்போது சில படங்களில் முக்கிய வேடங்களில் தலைகாட்டி வருகிறார். ஏற்கெனவே தமிழில் வந்த 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த நதியா, இப்போது ஒரு தெலுங்கு படத்தில் சமந்தாவின் தாயாக நடிக்கிறார். 'அ.ஆ.' என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். சமந்தாவின் பெற்றோராக நதியாவும் நரே‌ஷும் நடித்துள்ளனர். படத்தின் நாயகன் நிதின். விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். "நல்ல கதை என்பதால் உடனே நடிக்கச் சம்மதித்தேன். எனக்குப் பிடித்தமான, மனதை தொடக்கூடிய, சுவாரசியமான கதைகளில் நடிக்க நான் எப்போதுமே தயங்கியதில்லை. சமந்தா அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். அவருக்குத் தாயாக நடிப்பதில் மகிழ்ச்சி," என்கிறார் நதியா.