தனி நாயகியாக நடிக்க விரும்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தனி நாயகியாக நடிக்க விரும்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்

1 mins read

'அட்டகத்தி', 'ரம்மி', 'காக்கா முட்டை' உள்ளிட்ட படங்களில் யதார்த்தமான பாத்திரங்களில் நடித்து வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிப்புக்காக பாராட்டுகள் குவிந்தாலும் பட வாய்ப்புகள் தேடி வரவில்லை. ஒரு சில நடிகர்களின் சிபாரிசால் ஒன்றிரண்டு படங்கள் வந்தன. அதன் பிறகு வீட்டில்தான் இருக்கிறார். இந்நிலையில், 'ஹலோ நான் பேய் பேசுறேன்' படத்தில் தனி நாயகியாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டவர் ஐஸ்வர்யா. அப்படத்தில் அதிரடியாக ஆட்டம் ஆடியும், சுறுசுறுப்பாக நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்ததையடுத்து அம்மணியின் மவுசு கூடி இருக்கிறதாம். 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை', 'மனிதன்' போன்ற படங்களில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். எனினும், இதுவே தொடர் கதையாகி விடக்கூடாது என்பதால் அடுத்தடுத்து வரும் படங்களில் தனி நாயகியாக மட்டுமே நடிப்பேன் என கறாராகக் கூறிவிடுகிறாராம்.