ஆந்திரா, கேரளா, மும்பை என மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்த் திரையுலகத்திற்கு நாயகிகள்தான் இறக்குமதியானார்கள். இப்போது அவர்கள் பாணியில் தெலுங்குப் பட நாயகர்களும் கிளம்பியுள்ளனர். அல்லு அர்ஜூன், ராம்சரண், மகேஷ்பாபு போன்ற தெலுங்கு நாயகர்கள் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்குப் படையெடுத்துள்ளனர். அதற்கு முன்னோட்டமாக தாங்கள் நடித்த தெலுங்குத் திரைப்படங்களைத் தமிழுக்கு மாற்றி வெளியிடுகின்றனர். அந்த வரிசையில் அனுஷ்கா, தமன்னா துணையுடன் 'பாகுபலி' படம் மூலம் தமிழுக்கு வந்த பிரபாஸ் அடுத்து காஜல் அகர்வாலுடன் நடித்த 'டார்லிங்' படத்தை தமிழில் 'பிரபாஸ் பாகுபலி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார். இதில் பிரபு, முகேஷ் ரிஷி. துளசி, கோட்டா சீனிவாச ராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள். கருணாகரன் இயக்குகிறார்.
கோலிவுட்டுக்கு படையெடுக்கும் தெலுங்கு நடிகர்கள்
1 mins read
-

