குட்டி விஜயசாந்தியாகும் திரிஷா

குட்டி விஜயசாந்தியாகும் திரிஷா

1 mins read
d48aae2d-d952-4608-90f1-9575a5d8d104
-

'என்னை அறிந்தால்' படத்தை அடுத்து 'நாயகி' படத்­தில் கதை­யின் நாய­கி­யாக இரு பாத்திரங்களில் நடித்­துள்­ளார் திரிஷா. அதி­ர­டி­யும் நகைச்­சுவை­யும் கலந்த கதையைக் கொண்ட 'நாயகி' படத்­தில் நடித்து வரு­கிறார் திரிஷா. அந்தப் படம் தமி­ழி­லும் தெலுங்­கி­லும் வெளி­யாகவுள்­ளது. இதை­ய­டுத்து தனுஷ் பட­மான 'கொடி' படத்­தி­லும் நடித்து வரு­கிறார். இந்தப் படத்­தில் அவர் அர­சி­யல்வாதி­யாக நடிப்­ப­தாக செய்­தி­கள் வெளியாகி வந்த­போ­தும், இப்­போது கிடைத்த தக­வ­லின்­படி, திரிஷா அர­சி­யல்­வா­தி­யாக நடிக்­க­வில்லை­யாம். அர­சி­யல்­வா­தி­யாக நடிக்­கும் தனு­சுக்கு இணை­யாக நடிக்­கிறா­ராம்.

மேலும் இந்த 'கொடி', திரி­ஷாவை இது­வரை­யில்­லாத அள­வுக்கு மாறு­பட்ட கோணத்­தில் காண்­பிக்­கும் பட­மாம். அப்படி சத்­தான வேடத்தில் நடித்திருக்­கிறா­ராம். குறிப்­பாக, மன்னன் படத்­தில் நடித்த விஜ­ய­சாந்தி எந்த அள­வுக்­குக் கம்­பீ­ர­மாக நடித்­தாரோ அதே பாணி­யில் திரி­ஷா­வும் நடித்­தி­ருக்­கிறா­ராம்.