'தொடரி' வெளியீடு பற்றி தனுஷ்

'தொடரி' வெளியீடு பற்றி தனுஷ்

1 mins read
fb695746-8483-46fd-9e6e-4016f185beb8
-

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்திச் சுரேஷ், கருணாகரன் நடித்திருக்கும் 'தொடரி' படத்தின் முதல் கண்ணோட்டத்தின் படங்கள் கடந்த சில தினங் களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இதன் படப்பிடிப்பு வேலைகள் எப்போதோ முடிந்துவிட்டன. எனினும் பல மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் பின்னிணைப்பு வேலைகள் இன்னும் முடிந்தபாடில்லை. எனவே இப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. அதுகுறித்து தற்போது பேசியுள்ள தனுஷ், மே மாத இறுதியில் இப்படம் வெளியாகும் என்று கூறியுள்ளார்.