திருமணத் தகவலை மறுக்கும் தமன்னா

திருமணத் தகவலை மறுக்கும் தமன்னா

1 mins read
6a2a43da-5547-40b5-b3f1-27484ade7777
-

பொறியியலாளருடன் தனக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளதாக வெளியான தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் தமன்னா. அந்த தகவலில் சிறிதளவும் உண்மை இல்லை என்று அவர் கூறியுள்ளார். "நான் தற்போது திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் எனக்குப் பிடித்தமான ஒருவருடன் நிச்சயம் திருமணம் நடக்கும். அவ்வாறு நடக்கும்போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

சினிமாவில்தான் எனது முழு கவனமும் இருக்கிறது," என்கிறார் தமன்னா. இவருக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்க இருப்பதாக அண்மையில் இணையத்தளங்களில் பரபரப்புத் தகவல் வெளியானது. மணமகன் பொறியியலாளர் என்றும் இருவரும் நீண்ட நாட்களாக காதலிப்பதாகவும் திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலக தமன்னா முடிவு செய்துள்ளதாகவும் கூட கூறப்பட்டது. திருமண விஷயத்தில் அசினைப் பின்பற்றி தமன்னா செயல்படுவதாகவும் கருதப்பட்டது.