மாறன் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாகத் தயாராகும் படம் 'இணைய தலைமுறை'. நாயகனாக அஸ்வின்குமார் நடிக்கிறார். நாயகி மனிஷாஜித். இவர் 'கம்பீரம்' படத்தில் சரத்குமார் மகளாகவும், சில படங்களில் நாயகியாகவும் நடித்தவர். இவர்களுடன் ரவி, சத்யன், சிவகுமார், சர்மிளா, சஞ்சய், சரத், வனகைதி, தென்னவன் ராஜேந்திரநாத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு ஆரோ பொறுப்பேற்க, டி.ஜே.கோபிநாத் இசையமைத்துள்ளார். திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் சு.சி.ஈஸ்வர். "கல்லூரி வாழ்க்கை என்பது எப்போதுமே சுவாரசியமானது. உல்லாசப் பறவைகளாக பாடித் திரியும் மாணவ, மாணவியர் வாழ்க்கையில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் காதல், மோதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை கலந்து உருவாக்கி உள்ளோம். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது," என்கிறார் இயக்குநர் ஈஸ்வர்.
சமூக வலைத்தளங்கள் குறித்து அலசும் 'இணைய தலைமுறை'
1 mins read
-

