ஸ்டூடியோ கிரீன், அபி அண்ட் அபி, திருக்குமரன் என்டர்டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் 'இறைவி'. இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்கா, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் அஞ்சலி, கமா லினி முகர்ஜி, பூஜாதேவ்ரியா, கரு ணாகரன், சின்னுமோகன், ராதா ரவி, வடிவுக்கரசி ஆகியோரும் உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். இயக்கம் கார்த்திக் சுப்புராஜ். படம் பற்றி கூறிய விஜய் சேதுபதி, "எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்தாலும் இது வித்தி யாசமான படம்," என்கிறார். பாபி சிம்கா தனது பாத்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, இப்படம் தனது நடிப்புக்கு திருப்புமுனையை ஏற்ப டுத்தும் படம் என்று சொல்லி இருக்கிறார். அஞ்சலி, "இதுவரை நான் நடித்த படங்களில் இது மறக்க முடியாதது" என்று உற்சாகமடைகிறார்.
விரைவில் வெளியாகும் 'இறைவி'
1 mins read
-

