பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

1 mins read
f050403d-9566-439d-a05e-740147499005
-

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'ரெமோ' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து மோகன்ராஜா இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிவா. நகைச்சுவை கலாட்டா கதையாக உருவாகும் இந்தப் படத்தில் சூரியும் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.