அழகைக் குறைத்து நாயகனாக நடிக்கும் இயக்குநர்

அழகைக் குறைத்து நாயகனாக நடிக்கும் இயக்குநர்

1 mins read
adf1bb29-c627-4f61-b1d0-cd06019c5b37
-

புதுமுகம் நேசம் முரளி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் 'கொள்ளிடம்'. இப்படத்தில் புதுமுகம் லூதியா நாயகியாக அறிமுகமாகி றார். இவர்களுடன் ராசிக், வடிவுக்கரசி, இயக்குனர் வேல்முருகன், ராமச்சந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் நேசம் முரளி. "மனிதர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே அழகாக பிறக்கிறார்கள். மற்றவர்கள் அவ்வளவு அழகானவர்கள் என்று சொல்ல முடியாது. அப்படி அழகில்லாத ஒருவனின் காதல் கதை இது. "சொந்த அழகை குறைத்து நடிக்க வேண்டும் என்று பல நாயகர்களிடம் கேட்ட போது நடிக்க மறுத்து விட்டார்கள். எனவே நானே அந்த வேடத்தில் நடிக்கிறேன். டெல்டா மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது," என்கிறார் நேசம் முரளி.