பேருந்தில் மலரும் காதல் 'சாரல்'

பேருந்தில் மலரும் காதல் 'சாரல்'

1 mins read
3ff64f14-ad02-43a7-ae6c-749238398bdf
-

ரெயின்போ மூவி மேக்கர்ஸ் தயாரிக் கும் படம் 'சாரல்'. இதன் நாயகனாக தொலைக்காட்சித் தொகுப்பாளர் அசார், நாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார்கள். கோபாலகிருஷ்ணன் நாயகியின் தந்தையாகவும் வில்ல னாகவும் நடித்திருக்கிறார். நாயகன் அசாரின் நண்பர்களாக காதல் சுகுமார், பவர்ஸ்டார் சீனி வாசன், கோவை பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு இப்படத்தில் வில்லனின் மூன்றாவது அடியாள் வேடமாம். இவர் முதல் அடியாளாக வர வேண்டும் என்ற ஆர்வக் கோளாறால் ஏற்படும் சம்ப வங்களே நகைச்சுவையுடன் கூடிய கலாட்டாவாக அமைந்திருக்கிறது.

கோவை பாபு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளை நம்ப வைத்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித் துள்ளார். இப்படத்துக்கு இஷான் தேவ் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப் பதிவைக் கவனிக்கிறார். கதிகை இப்படத்தின் தயாரிப் பாளர். டி.ஆர்.எல். என்பவர் இயக்குகிறார். "பேருந்துப் பயணத்தின்போது நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் மலர்கிறது. இந்நிலையில் எதிர் பாராத விதமாக ஒருநாள் பேருந் தில் இருந்து இறங்கும் நாயகன் இன்னொரு வாகனம் மோதி உயிர் இழக்கிறான். இதை நேரில் பார்க்கும் நாயகியின் மனநிலை பாதிக்கப்படுகிறது. 'சாரல்' படத்தின் ஒரு காட்சியில் அசார், ஸ்ரீபிரியங்கா.