ஆதவன்: நடுக்கடலில் கப்பலில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி

ஆதவன்: நடுக்கடலில் கப்பலில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி

1 mins read
d94b8cdd-78eb-49b0-bea6-7f75d8f26727
-

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மிகப்பெரிய அளவில் தயாரிக்கும் படம் 'அந்தமான்'. கதா நாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, வையா புரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோ கர், லொள்ளுசபா மனோகரன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறக் கப்பட்டுள்ளது. கானா பாலா ஒரு பாடலைப் பாடியதுடன், அதற்காக நடிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப் பாக நடைபெற்று வருகிறது. பிரமாண்ட மான முறையில் படமாக்கப் பட்டு வரும் இப்படத்தில் இடம்பெறும் 'கோகோ கோகோ கோலா... நான் வந்திருக்கேன் கூலா...' என்ற பாடல் முழுக்க முழுக்க கப்பலில் படமாக் கப்பட்டு வருகிறது.

எம்ஜிஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குப் பிறகு முழுக்க கப்பலில் மட்டுமே படமாக்கப்பட்ட பாடல் இது தான் என்கிறார் இயக்குநர் ஆதவன். இவர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாள ராகப் பணியாற்றியவர். இரவு நேரத்தில், பல வண்ண விளக்குகளுடன், கப்பலில் கூடுதல் அரங்குத்தளங்கள் அமைத்து, இடையி டையே குதிரைகளையும் ஓட வைத்து ரசிகர்கள் பிரமிக்கும் வகையில் இப்பாடல் படமாகியுள்ளது.