“பாபி சிம்ஹா ஒரு சாப்பாட்டு ராமன்”

பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் ‘கோ=2’. முன்னதாக இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கடந்த சில வாரங்களாகவே படக்குழுவினருடன் இணைந்து நிக்கி கல்ராணியும் படம் குறித்துப் பேசி வருகிறார். அப்போது அவர் படத்தில் நடித்த அனுபவம் மட்டுமின்றி, நாயகன் பாபி சிம்ஹா குறித்தும் சில சுவையான தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், ஒரு விளம்பர நிகழ்ச்சியின்போது பாபி சிம்ஹா படத்தில் நடிக்கிற நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் எதையாவது சாப்பிட்டுக் கொண்டேயிருப்பதாக கூறிய நிக்கி கல்ராணி, அவர் மட்டுமன்றி அவர் அருகில் யார் இருந்தாலும் அவர்களையும் சாப்பிடச் சொல்வார். அதனால் யாராவது குண்டாக வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர்கள் பாபி சிம்ஹாவுடன் நட்பு வைத்துக்கொள்ளலாம் என்றார்.