சக்திவேல் வாசு நாயகனாக நடிக்கும் '7 நாட்கள்'

சக்திவேல் வாசு நாயகனாக நடிக்கும் '7 நாட்கள்'

1 mins read
12d00676-a1e4-47dc-be91-42a3eecf3718
-

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பில் தயாராகும் முதல் படம் '7 நாட்கள்'. கவுதம் வி.ஆர். என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இவர் சுந்தர் சி.யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி நிகிஷா படேல். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.

பி.வாசு இயக்கிய 'சின்னதம்பி' படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்தவர் சக்திவேல். 26 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக அங்கனா ராய் நடிக்க, கணேஷ் வெங்கட்ராம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் பிள்ளை, சின்னி ஜெயந்த், விஷ்ணு, ரேஷ்மி மேனன், தேவதர்‌ஷினி உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க வேடங்களை ஏற்றுள்ளனர். பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் கௌரவ வேடங்களில் தோன்றுவார்களாம். படப்பிடிப்பு இப்போது தொடங்கி உள்ளது.