பாக்யராஜ் கண்ணன் இயக்கும் 'ரெமோ' படத்தைத் தன் நண்பரின் பெயரில் தானே தயாரித்து நடித்து வருகிறார் சிவகார்த்தி கேயன். இப்படத்தைத் தானே தயாரித்து வருவதால் மிகவும் பதற்றத்தில் இருக்கிறார் சிவா. ஒருவேளை 'ரெமோ' படம் ஓடவில்லை என்றால் இதன் தயாரிப்புக்கு வாங்கிய கடனுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதுதான் இவரின் பதற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் 'ரெமோ' படம் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத் தையும் மிகவும் யோசித்தே செய்து வருகிறாராம். அதோடு 'எடிட்டிங்', 'டப்பிங்' போன்ற படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகளின் போதும் கூடவே இருக்கிறாராம். தன்னால் உடன் இருக்க முடியாத நேரங்களில் தன்னுடைய நண்பரும் படத்தின் தயாரிப்பாளருமான ராஜாவை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்கிறார் சிவா. அதனால் சிவகார்த்திகேயன் எப்போதும் கூடவே இருப்பதால் புதுமுக இயக்குநரான பாக்யராஜ் கண்ணனுக்கு சங்கடமாக உள்ள தாம்.2016-06-09 06:00:00 +0800
தயாரித்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்
1 mins read
-

