ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் 'நட்சத்திர ஜன்னலில்'. இதில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார். "ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஏழைக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தையும், பணக்காரக் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றன. அக்குழந்தைகள் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் மலர்கிறது. படிக்கும் வயதில் படிக்க வேண்டும். அதிலிருந்து கவனம் சிதறினால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதைச் சொல்லி இருக்கிறோம்," என்கிறார் இயக்குநர் ஜெயமுருகேசன்.
'நட்சத்திர ஜன்னலில்'
1 mins read
-

