சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் 'வாகா'

சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் 'வாகா'

1 mins read
dce286d8-6925-4838-891c-b7e794841590
-

விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'வாகா' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள் ளது. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரன்யா ராவ் நடித்துள்ளார். குமரவேலன் இயக்கியுள்ளார். அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்டுள்ளன. இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதையடுத்து படத்தின் வெளி யீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி 'வாகா'வை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படம் ராணுவம் தொடர்பான கதை என்பதால் ஆகஸ்ட் மாதம் வெளியாவது சிறப்பாக இருக்கும் என்பது படக்குழுவினரின் எண்ணம். இப்படம் விக்ரம் பிரபுவின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார் குமரவேலன்.