நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - மடோனா

நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - மடோனா

1 mins read
1f85d032-b71e-4e82-ae2d-78438eb3598b
-

விஜய் சேதுபதியுடன் 'காதலும் கடந்து போகும்' படத்தில் நடித்த மடோனா செபஸ்டியனுக்கு வரும் வாய்ப்புகளில் கவர்ச்சி, கதாநாயகர்களைக் கட்டி அணைத்து நடிக்கும் காட்சி வருவதால் தயக்கம் காட்டி வருகிறார். இந்தக் காரணத்துக்காகவே அவர் மணிரத்னத்தின் புதிய படத்திலிருந்து விலகினார். நாயகனைக் கட்டி அணைத்து நடிப்பதுபற்றி அவர் கூறும்போது, "உடல் கவர்ச்சியை வெளிப்படுத்தும் உடைகள் அணியமாட்டேன். நாயகனுடன் உடலைத் தொட்டு நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனத் தொடர்ச்சியாகக் கூறி வருகிறேன்.

புகைப்படக் கருவி முன்னால் கதாநாயகன் என்னைக் கட்டி அணைப்பதை அனுமதிக்க முடியாது. ஒருவேளை என் நண்பராக இருந்தால் அதை நான் சகித்துக்கொள்ள வாய்ப்புள்ளது," என்கிறார் மடோனா. மடோனா தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.