கன்னடம், தெலுங்கு, இந்திப் படங்களில் முத்திரை பதித்திருந்தாலும், இதுவரை மொழிமாற்றுப் படங்கள் மூலமாகவே தமிழ் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் சுதீப். அவர் நடித்துள்ள நேரடித் தமிழ்ப் படமான 'முடிஞ்சா இவன புடி' குறித்து பல்வேறு சுவாரசியத் தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம். அவர் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படமும் இதுதான். இமான் இசையில் சுதீப், நித்யாமேனன் இணைந்து பாடியிருக்கும் பாடல்தான் இப் படத்தின் முக்கிய சிறப்பம்சம் என்கிறார்கள்.
தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயா ராகும் 'முடிஞ்சா இவன புடி'யை ஆயி ரம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். 'கபாலி' வெளியான பிறகு தமிழ் ரசிகர்களுக்கு இவனைப் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். இப்படம் வெளியான பிறகு கோடம்பாக்கத்திலும் தனக்கென தனி இடம் கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன் உற்சாகத்துடனும் காத்திருக்கிறாராம் சுதீப்.

