விஜய் சேதுபதியின் நம்பிக்கை

விஜய் சேதுபதியின் நம்பிக்கை

1 mins read
8d5012f1-77e2-47dd-a7aa-08940f643228
-

விஜய் சேதுபதியின் 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை', 'மெல்லிசை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். ஆனால் படங்கள் எப்போது வெளியாகும் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளிவரவில்லை. விஜய் சேதுபதி நடித்த 'இடம் பொருள் ஏவல்' படம் வருகிறதோ இல்லையோ 'தர்மதுரை' படம் கண்டிப்பாக வந்துவிடும் என்கிறது கோலிவுட். 'மெல்லிசை' படம் பற்றி மெலிதாகக் கூட யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள்.

விஜய் சேதுபதி தான் நடித்து முடித்துள்ள மற்ற படங்களின் வெளியீட்டில் எந்த வித அக்கறையும் செலுத்தாமல் இருக்கிறார். "படம் வெளியீடு எல்லாம் தயாரிப்பாளரின் வேலை என அவர் ஒதுங்கக்கூடாது. வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி படங்கள் முடிவடைந்த பின்னும் வெளியாகாமல் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு நிற்பதற்கு அவர்தான் காரணம். அடுத்தடுத்துப் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதை அவர் குறைக்க வேண்டும்," என்று சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.