கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாகிறது 'கவலை வேண்டாம்'

கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாகிறது 'கவலை வேண்டாம்'

1 mins read
8bebced7-e592-463f-aaba-631b9700859d
-

ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் 'கவலை வேண் டாம்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா நடிப்பில் கடைசியாக 'போக்கிரி ராஜா' படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் நடிக்கும் படம் 'கவலை வேண்டாம்'. இதில் ஜீவா ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

'யாமிருக்க பய மேன்' டி.கே இயக்குகிறார். எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட் டத்தில் உள்ளது. எனவே எதிர்வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்ட மிட்டுள்ளனர். நயன்தாராவுடன் ஜீவா நடித்துள்ள 'திருநாள்' படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.