படத்தில் இருந்து விலகிய சமந்தா

படத்தில் இருந்து விலகிய சமந்தா

1 mins read
22036c72-0296-44e3-87c4-3daf2032a6cb
-

விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் தனு‌ஷின் 'வட சென்னை' படத்தில் இருந்து அதன் நாயகி சமந்தா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இளம் நடிகர் ஒருவரைக் காதலிப்பதாக அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் சமந்தா. அவர் குறிப்பிட்டது நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா என்று தகவல் பரவியுள்ளது. எனினும் இருதரப்புமே இதை இன்றுவரை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருந்தார் சமந்தா. இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. மொத்தம் மூன்று பாகங்களாக இப்படம் தயாராகிறது.

இந்நிலையில்தான், சமந்தா இப்படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் உலா வருகின்றன. திருமணத்துக்குப் பின்பு நடிப்புக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ளாராம் சமந்தா. எனவே 'வட சென்னை'யின் முக்கிய பாகங்களில் நடிக்க முடியாமல் போக வாய்ப் புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.