ஒரே படத்தில் மகேஷ்பாபு, விஜய்

ஒரே படத்தில் மகேஷ்பாபு, விஜய்

1 mins read
c3f58d86-7ee0-43e8-a786-ec6516e63a03
-

இயக்குநர் சுந்தர்.சி பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் அதை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என்றும் கலை இயக்குநராக சாபுசிரில், கிராபிக்ஸ் நிபுணராக கமலக்கண்ணன் பணியாற்றுவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் நாயகன் யார்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் தயாராகவுள்ள இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய்யும், தெலுங்குப் பதிப்பில் மகேஷ்பாபுவும் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தகவல் உண்மையானால் ஒரே படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பில் விஜய்யும் மகேஷ்பாபுவும் ஒரே நேரத்தில் நடிப்பது சாத்தியமாகும்.