பாராட்டுகளை அள்ளும் வரலட்சுமி

பாராட்டுகளை அள்ளும் வரலட்சுமி

1 mins read
82ff7643-321d-4fbe-b96b-8c45406e0dad
-

மம்முட்டியுடன் நடித்த 'கபாசா' படத்தில் வரலட்சுமியின் நடிப்பை மலையாள ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். 'போடா போடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. பாலா இயக்கத்தில் நடித்த 'தாரை தப்பட்டை' இவருக்கு மலையாளப் பட வாய்ப்பை வழங்கியது. மம்முட்டியுடன் வரலட்சுமி நடித்த 'கபாசா' படம் இப்போது வெளியாகி இருக்கிறது. புதுமுக இயக்குநர் நிதின் ரெஞ்சி பணிக்கர் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் வரலட்சுமி நடிப்பை மலையாள ரசிகர்கள் ரொம்பவே புகழ்ந்து வருகிறார்கள்.

அதிலும், மம்முட்டிக்கே சவால் விடும் வகையில் நடித்திருக்கிறார் என்று விமர்சகர்களும் பாராட்டியுள்ளனர். இதனால் வரலட்சுமி பாராட்டுகளை அள்ளிய மகிழ்ச்சியில் இருக்கிறார். இதன் விளைவு, மேலும் சில மலையாளப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். அனைத்துக் கதைகளையும் கேட்டு முடித்து, நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து வருகிறாராம் வரலட்சுமி. தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளாராம்.