'அந்த குயில் நீதானா'

'அந்த குயில் நீதானா'

1 mins read
f84eafca-1415-441b-a19a-314432ee070e
-

பொன்னு பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'அந்த குயில் நீதானா'. இதில் சாகர் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி கீர்த்தி கிருஷ்ணா. இவர்களுடன் ஸ்ரேயா ஜோஸ், சாலம் குன்னத், வேணு, சாருலதா, ராக்பியா, பேபி ஸ்ரேயா, தாரகன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்டேன்லி ஜோஸ் இயக்குகிறார். "தொல் பொருள் ஆராய்ச்சியாளரான சங்கர்பாலா தனது மனைவி அஞ்சலியுடன் கிராமத்திற்கு வருகிறார். அந்தக் கிராமத்தில் வழிகாட்டியாக இருக்கும் முத்துவின் மீது அஞ்சலி காதல் கொள்கிறாள். அவளது தவறான எண்ணம் நிறைவேறியதா? இல்லையெனில் முத்துவுக்கு மாமன் மகள் பவளத்துடன் திருமணம் நடந்ததா என்பதைக் கிராமிய மணத்துடன் சொல்கிறோம்," என்கிறார் ஸ்டேன்லி ஜோஸ்.