மீண்டும் ஜோடி சேர்ந்த ஜெய், அஞ்சலி

மீண்டும் ஜோடி சேர்ந்த ஜெய், அஞ்சலி

1 mins read
ba397e2f-3d21-4f17-99fe-333725ca1cfe
-

ஜெய், அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்திற்கு 'பலூன்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஜெய், அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'எங்கேயும் எப்போதும்'. இதில் இந்த ஜோடியின் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது. மேலும் இருவருக்கும் இடையே காதல் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் தோன்றி மறைந்தன.

இந்நிலையில் இந்த ராசியான ஜோடி ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கும் இந்தப் படம் காதல் கலந்த திகில் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை அறிவித்திருக்கின்றனர். 'பலூன்' என்று தலைப்பு வைத்து, முதல் சுவரொட்டியையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் ஜெய்யின் இருபதாவது படமாகும். மேலும் இந்த படத்தில் ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.