புனிதமான ஆத்மாக்களை குறித்துப் பேசும் புதிய படம் 'சாயா'

புனிதமான ஆத்மாக்களை குறித்துப் பேசும் புதிய படம் 'சாயா'

1 mins read
fc5b2ce8-6589-4c9f-a22a-85db4bf702c0
-

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'சாயா'. இதில் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு வன இலாகா அதிகாரி வேடமாம். இப்படத்தை பழனிவேல் இயக்குகிறார். சாயா என்பதற்கு சக்தி நிறைந்த என்று பொருள். அந்த சக்தி நிறைந்த வார்த்தைக்கும், ஆத்ம சக்திக்கும் நல்ல நோக்கத்திற்குமான தொடர்பு இருப்பதால் படத்திற்கு 'சாயா' என்று பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் என்கிற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் 'டூரிங் டாக்கீஸ்' படத்தின் நாயகியாக காயத்திரி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக 'ஓம் சாந்தி ஓம்' படத்தில் நடித்த கௌதமி செளத்ரி நடிக்கிறார்.

"காட்டிற்குள் நடக்கும் கடுமையான சண்டைக் காட்சிகளில் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் சோனியா அகர்வால். வன இலாகா அதிகாரியாக நடிக்கும் அவருக்கு இப்படம் நிச்சயம் ரசிகர்களிடம் நற்பெயரைப் பெற்றுத் தரும். இதுவரை எடுக்கப்பட்ட பேய்ப் படங்களில் ஆவிகளைப் பற்றி மட்டுமே பேசியுள்ளனர். பயம் காட்டுவதையும் சப்தங்களால் மிரட்டுவதையும் விட்டுவிட்டு இப்படம் புனிதமான ஆத்மாக்களைப் பற்றிப் பேசும்," என்கிறார் பழனிவேல்.