'பழகிப் பார்த்தால் யானைகள் குழந்தைகள் போன்றவை'

'பழகிப் பார்த்தால் யானைகள் குழந்தைகள் போன்றவை'

1 mins read
a7571f0c-0993-461f-be67-f37e16827fa6
-
Google News Preferred Icon

தமிழில் 'மெட்ராஸ்', 'கதகளி', 'கணிதன்' போன்ற படங்களில் நடித்த கேத்ரின் தெரசா, இப்போது ஆர்யாவுடன் 'கடம்பன்' படத்தில் காட்டுவாசிப் பெண்ணாக நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு காட்சியில் 50 யானைகள் ஒன்றுகூடி இவரைத் துரத்த அப்போது குறுக்கே பாய்ந்து, யானைகளிடம் சண்டை போட்டு கேத்ரினை காப்பாற்றுவார் ஆர்யா. இக்காட்சியைத் தாய்லாந்து நாட்டு காடுகளில் படமாக்கியபோது யானைகளுடன் நெருக்கமாகப் பழகிய கேத்ரின், "யானைகள் உருவத்தில்தான் பயத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், பழகிப் பார்த்தால் அவை குழந்தைகள் மாதிரிதான் உள்ளன," என்று தெரிவித்துள்ளார்.