காவல்துறை அதிகாரியாக அசத்தும் சகோதரர்கள்

2 mins read
975a3622-9be9-4daa-886c-9e346a4ae2af
-

கார்த்தி கிட்டத்தட்ட 5 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படு கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'சிறுத்தை'. இதில் அவர் முதன் முறையாக போலிஸ் வேடத்தில் நடித் திருந்தார். இப்படத்திற்குப் பிறகு அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்கவில்லை. இந்நிலையில், தற்போது ஐந் தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் போலிஸ் வேடத் தில் நடிக்கிறாராம். 'சதுரங்க வேட்டை' படத்தின் இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் கார்த்தி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இதில்தான் கார்த்தி போலிஸ் வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் தற்போது 'காஷ்மோரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' யில் நடிக்கிறார். இப்படம் முடிந்த கையோடு, வினோத்குமார் இயக் கத்தில் நடிப்பார் எனத் தெரி கிறது. இப்படத்தின் பிற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலை ஞர்கள் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தம்பிக்கு முன்பே காவல்துறை அதிகாரி வேடத்தில் அசத்தியவர் அண்ணன் சூர்யா. அவர் நடிப்பில் உருவாகி வரும் 'சிங்கம் 3' படத்தின் தமி ழக உரிமை பெரும் தொகைக்கு விலை போயிருக்கிறதாம். இதில் சூர்யா போலிஸ் வேடத்தில் அசத்தியிருப்பது ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயம்தான். '24' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சிங்கம் 3'. அனுஷ்கா, ஷ்ருதிஹாசன் உள் ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'சிங்கம் 2' படத்தின் ஒரு காட்சியில் சூர்யா, அனுஷ்கா.