முருகதாஸ் படத்தில் ராகுல் பிரீத் சிங்

முருகதாஸ் படத்தில் ராகுல் பிரீத் சிங்

1 mins read
9c763bb7-3ffc-4a63-9c00-70c929b26ddf
-

சோனாக் ‌ஷி சின்ஹா நடிப்பில் 'அகிரா' என்ற இந்திப் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்தது. பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இப்போது ராகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகி உள்ளார். இதை முருகதாஸே உறுதிப்படுத்தி உள்ளார். இந்தி 'அகிரா' வெளியானதும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.