'தர்மதுரை' படப் பாடல்கள் வெளியீட்டு விழா

'தர்மதுரை' படப் பாடல்கள் வெளியீட்டு விழா

1 mins read
d145da8e-f405-4a99-a307-b02795ee1731
-

விஜய் சேதுபதி நடித்துள்ள 'தர்மதுரை' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தர்மதுரை'. இதன் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளில் களமிறங்கியிருந்தது படக்குழு. படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. மேலும், 'தர்மதுரை' குறித்து புது செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில் இம்மாதம் 27ஆம் தேதி இப்படத் தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதில் தமன்னா, சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையில், வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.