'கிராமத்துப் பெண்களே என் முன்னுதாரணம்'

'கிராமத்துப் பெண்களே என் முன்னுதாரணம்'

1 mins read
182f1c26-bba4-4173-b9bf-ac374669cfe1
-

கிராமத்துப் பெண்கள்தான் தனக்கு முன்னுதாரணம் என்று நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார். லட்சுமி மேனனுக்கு என தனி ரசிகர் வட்டம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் கிராமத்துப் பெண் வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் அம்மணி. 'கும்கி', 'சுந்தரபாண்டியன்', 'பாண்டியநாடு', 'ஜிகர்தண்டா', 'குட்டிப்புலி', 'மஞ்சப்பை', 'கொம்பன்' படங்களில் இவர் ஏற்று நடித்த பாத்திரங்களுடன் அப்படியே பொருந்திப்போனார்.

இதன் காரணமாக கிராமத்துப் பெண் வேடத்தில் சிறப்பாக நடிக்கிறார் என்று பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. தொடர்ந்து அத்தகைய கதாபாத்திரங்களில் நடிக்கக் கேட்டு பல வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கும் 'றெக்க' படத்திலும் லட்சுமி மேனன் கிராமத்துப் பெண்ணாகவே வருகிறார். இந்த வேடங்களில் சிறப்பாக நடிப்பது எப்படி என்பது குறித்து அவர் அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"நான் படப்பிடிப்புக்காக கிராமங் களுக்குச் செல்லும்போது அங்கு வேடிக்கை பார்க்க வரும் பெண்களுடன் சாதாரணமாகப் பழகுவேன். அப்போது அவர்களுடைய பேச்சு, பழக்கம், உடல் அசைவு போன்றவற்றைக் கவனமாகப் பார்த்து மனதில் பதிய வைத்துக் கொள்வேன். "படத்தில் நடிக்கும்போது கிராமத்துப் பெண்களின் அசைவுகளை அப்படியே பிரதிபலிப்பேன். அதுதான் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தருகிறது. கிராமத்துப் பெண்ணாக நான் நடிக்கும் படங்களில் அத்தகைய பெண்களை மனதில் நிறுத்தி, அவர்களைப் போலவே என்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன்.