கமல்ஹாசன் நாயகி இப்போது விவேக் நாயகியாகிறார்

கமல்ஹாசன் நாயகி இப்போது விவேக் நாயகியாகிறார்

1 mins read
2c64c87a-84c0-497b-ac73-0ee57af78228
-

தற்போது 'துப்பறியும் சங்கர்' என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விவேக். இதில் அவருக்கு துப்பறிவாளர் கதாபாத்திரம். கடந்த 1960களில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இப் படம் உருவாக இருக்கிறதாம். புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கப் போவதாகத் தகவல். இந்நிலையில், கமல் நடித்த 'வேட்டையாடு விளையாடு' 'இறைவி' ஆகிய படங்களில் நடித்த கமலினி முகர்ஜியை விவேகின் இணையாக ஒப்பந்தம் செய்துள்ளனராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் சென்னையில் தொடங்க இருக்கிறது. பிற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகக் கூடும்.