எம்எல்ஏவானார் கேத்ரின் தெரசா

எம்எல்ஏவானார் கேத்ரின் தெரசா

1 mins read
b4827b0e-5f31-45f6-b23f-0743f3da0a3e
-

கேத்ரின் தெரசா முதன் முதலில் தமிழில் நடித்த படம் 'மெட்ராஸ்'. இந்தப் படத்­திற்­குப் பிறகு அதர்­வா­வு­டன் 'கணிதன்', விஷா­லு­டன் 'கதகளி' படங்களில் நடித்து இருந்தார். தற்­பொ­ழுது தமிழில் ஒரு படம் மட்டும் இருப்பதால் தெலுங்­குப் பக்கம் சாய்ந்­தி­ருக்­கிறார். தெலுங்­கில் கேத்ரின் தெரசா, அல்லு அர்ஜூன் ஜோடியாக அண்மை­யில் நடித்து வெளி­வந்­தி­ருக்­கும் படம் 'சரைனொடு'. இதில் அவர் 'ஹன்சிதா ரெட்டி' என்ற பெயரில் எம்.எல்.ஏ.வாக நடித்­துள்­ளார். இந்தப் படம் வெற்றி பெற்­ற­தால், ஆந்திர ரசி­கர்­கள் இவரை எம்.எல்.ஏ. என்று அழைக்க ஆரம்­பித்­தி­ருக்­கிறார்­கள். எங்கு சென்றா­லும் "அடுத்த தேர்­த­லில் எங்களுடை­யத் தொகு­தி­யில் நீங்கள் நிற்­க­வேண்­டும். நாங்கள் உங்களை கட்­டா­யம் எம்.எல்.ஏ.வாக எங்கள் தொகு­தி­கிக்குத் தேர்ந்­தெ­டுப்­போம்," என்­கிறார்க­ளாம்.

"ஆந்திர ரசி­கர்­கள் என்னை எம்.எல்.ஏ. என்று அழைப்­பது மகிழ்ச்சியாக இருக்­கிறது. அந்த அள­விற்கு அவர்­கள் மனதில் அந்தக் காதா­பாத்­தி­ரம் இடம்­பெற்­றுள்­ளது. தற்போது கோபி­சந்த் ஜோடியாக ஒரு படத்­தி­லும், ராணா ஜோடியாக மற்றொரு படத்­தி­லும் நடித்து வரு­கி­றேன். "தமிழில் ஆர்­யா­வு­டன் 'கடம்பன்' படத்­தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழி­களி­லும் இப்போது கவனம் செலுத்தி வரு­கி­றேன்," என்றார் கேத்ரின் தெரசா.