வளர்ச்சியால் தொல்லை; விவரிக்கும் புதுப்படம்

வளர்ச்சியால் தொல்லை; விவரிக்கும் புதுப்படம்

2 mins read
473951dd-3008-4bf3-bdb6-81b8137aa799
-

தமிழ், தெலுங்குப் படங்களில் கதா நாயகனாக நடித்த டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் தற்போது தமிழ்ப் படத்தில் கதா நாயகனாக அறிமுகமாகிறார். அவர் அறிமுகமாகும் படம் '88'. இப்படத்தின் கதை, திரைக் கதை, வசனம் ஆகியவற்றை எழுதியிருப்பதும் மதன்தான். அது மட்டுமல்ல, இவரே இசை யமைத்தும் உள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில், 'மிஸ் இண்டியா ஏஷியா' பட்டம் வென்ற உபாஷ்னா ராய் இப்படத்தின் கதாநாயகி. மேலும், ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, மீரா கிருஷ்ணன், பவர்ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ், அப்புகுட்டி எனப் பலரும் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர். "இன்றைய தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தி ருக்கிறது. இது அபாய வளர்ச்சியாகவும் கருதப்படுகிறது. எனவே இன்றைய சூழ்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியானது எப்படி கலாசார சீர்கேட்டை உரு வாக்குகிறது என்பதே இந்தப் படத்தின் கதை. "சில விஷயங்களை மற்றவர் களுக்குத் தெரியாமல் ரகசியமாக, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அப்படி மறைத்து வைத்திருக்க வேண்டிய நச்சு யங்கள் பகிரங்கப்படுத்தப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை யும் சங்கடங்களையும் கவன மாகக் கையாண்டுள்ளோம். "ஒரு நல்ல கருத்தை வணிக ரீதியாகக் கையாண்டு விளக்கிய திருப்தி எனக்குக் கிடைத்திருக்கி றது. கவிஞர்கள் அறிவுமதி, மதன்கார்க்கி ஆகியோரின் வரிக ளில், தயாரத்னம் இசையில் இனிய பாடல்கள் அமைந்துள் ளன. அவை ரசிகர்களை நிச்சயம் கவரும். "இது இளையர்கள், பெரியவர் கள் என இரு தரப்புக்கும் ஏற்ற படமாக இருக்கும். திணிக்கப்பட்ட காட்சி, கவர்ச்சி என எதுவும் இருக்காது. எனினும் இளையர்க ளுக்கு எனக் கூடுதல் அம்சங்கள் உண்டு," என்கிறார் இயக்குநர் மதன். இப்படத்தை ஏ.ஜெயகுமார் தயாரிக்கிறார். சென்னை, கும்ப கோணம், கேரளா ஆகிய இடங் களில் படப்பிடிப்பு நடைபெற்றுள் ளது. மிக விரைவில் படம் வெளி யாகக்கூடும் எனக் கேள்வி.