கவுதமி: நல்ல வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்

கவுதமி: நல்ல வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்

1 mins read
804ea83d-1c52-436f-ac1d-cf4b4427b2ae
-

சினிமா தன் ரத்தத்தில் கலந்த ஒரு விஷயம் என்றும், அதனை விட்டுத் தம்மால் விலக முடியாது என்றும் நடிகைக் கௌதமி தெரிவித்திருக்கிறார்.

'பாபநாசம்' படத்திற்குப் பின் கவுதமி தற்போது மோகன் லாலுடன் இணைந்து நடித்திருக்கும் 'நமது' திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

'நமது' திரைப்படத்தின் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி என்னைத் தொடர்பு கொண்டு படத்தின் கதையைக் கூறினார். கதை எனக்குப் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். 'பாபநாசம்' படத்தைப் பார்த்துத் தான் அவர் என்னை இந்தப் படத்தில் நடிக்கக் கூப்பிட்டாரா என்ற சந்தேகம் எனக்கு இருந் தது. ஆனால் என்னை மனதில் வைத்துத்தான் கதை எழுதியதாக தெரிவித்தார்.

"இப்படத்தின் கதையைக் கேட்டு மோகன்லாலும் நடிக்க ஒப்புக் கொண்டார். தற்போது 'நமது' படத்தின் முழுப் பணிக ளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி விட்டது. தமிழ், தெலுங்கில் நானே பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறேன்.

"நான்குத் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய வன் முறை இல்லாத படமாக 'நமது' இருக்கும். எனக்கேற்ற வேடங்க ளில் தொடர்ந்து நடிப்பேன்," என்கிறார் கவுதமி.