இறுதிக்கட்டத்தில் 'ஆண்டவன் கட்டளை'

இறுதிக்கட்டத்தில் 'ஆண்டவன் கட்டளை'

1 mins read
5b84daa2-9ac9-40a6-adf9-835b48b14c1f
-

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இதை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் தயாரிக்கிறார். கே இசையமைத்திருக்கிறார்.

மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'காக்கா முட்டை' ஏராளமான விருதுகளை வென்றதுடன் வசூலிலும் சாதனைப் படைத்தது. இதனால் 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடப்பிதழ்த் தொடர்பான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதையை மணிகண்டன் உருவாக்கி உள்ளார். தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருக்கிறது.

அடுத்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.