படங்களில் நாயகன், நாயகி அல்லது இயக்குநர் தொடர்ந்து சில படங்களில் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிவடையும். அப்படித் திருமண பந்தத்தில் இணையும்போது ஒரு சிலர் நடிகைகளிடம் இனி படங்களில் நடிக்கக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிய பிறகு திருமணம் செய்துகொள்வார்கள். அதுபோல் இணைந்தவர்களில் ஒரு சிலர் உறுதிமொழியை மறப்பதால் வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பிக்கிறது. முதலில் சிறிய விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பிக்கின்றனர்.
அதன்பின்னர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தனி நாயகி கதை என்று ஆரம்பித்து நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் பட வாய்ப்புகள் வந்தால் தட்டிக் கழிக்காமல் நடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாத சிலரின் வாழ்க்கை விவாகரத்தில் முடிவடைகிறது. இதில் தற்பொழுது மாட்டிக்கொண்டு இருக்கும் ஜோடி அமலா பால் இயக்குநர் விஜய். அடுத்த அதிர்ச்சி தரும் தகவலாக வெளி வந்திருக்கிறது ஐஸ்வர்யா ராயின் திரையுலக மறுபிரவேசம். அபிஷேக் பச்சனை மணந்து அழகான குழந்தை ஆராத்யாவின் தாய் ஆனார் ஐஸ்வர்யா ராய். கைக்குழந்தை வளரும் வரை காத்திருந்தவர் மீண்டும் நடிக்க முடிவு செய்தார். அப்போதே மாமியார் ஜெயா பச்சன் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அதனால் காதல் காட்சிகள் இல்லாத 'ஜஸ்பா' என்ற கதையைத் தேர்வு செய்து நடித்தார். அடுத்து கரண் ஜோஹர் இயக்கும் 'ஹே தில் ஹை முஷ்கில்' படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதில் ரன்பீர் கபூர் கதாநாயகன். இவர் ஐஸ்வர்யாவைவிட வயது குறைந்தவர். கதைப்படி ரன்பீருடன் ஐஸ்வர்யா காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்தார். இந்த விஷயம் அமிதாப்பச்சன் குடும்பத்தினருக்குத் தெரியவர அவர்கள் உஷாராகினர். காதல் காட்சிகளில் நடித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பயந்துபோன ஐஸ்வர்யா ராய்,
ரன்பீருடன் நடித்த காதல் காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கும்படி இயக்குநரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அக்காட்சி கதைக்கு மிகவும் முக்கியம் என்று சொல்லி நீக்க மறுத்துவிட்டார் இயக்குநர். என்ன செய்வதென்று தெரியாமல் ஐஸ்வர்யா ராய் தவித்துக் கொண்டிருக்கிறார். மருமகளுடன் ரன்பீர் கபூர் காதல் காட்சியில் நடித்ததால் அவருடன் அமிதாப் குடும்பத்தினர் பேசுவதை நிறுத்தி உள்ளனர். இது தற்பொழுது போலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.