2,000 அடி உயரத்தில் படப்பிடிப்பு

2,000 அடி உயரத்தில் படப்பிடிப்பு

1 mins read
c773238f-02c1-4980-9ad8-d2dc4ad984e5
-

'பொட்டு'படத்தின் முக்கிய காட்சிகளை 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப் பகுதியில் படம் பிடித்துள்ளனர். 'சவுகார்பேட்டை' புகழ் வடிவுடையான் இயக்கிவரும் புதிய படம் 'பொட்டு'. பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இனியா, சிருஷ்டி டாங்கே என மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். நமீதா இப்படத்தில் முக்கிய மான, வித்தியாசமான கதா பாத்திரத்தை ஏற்றுள்ளார். மேலும் முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, பரணி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி‌ஷிண்டே மற்றும் மன்சூரலிகான் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

அண்மையில் இப்படத்தின் முக்கிய காட்சிகளை கொல்லி மலைப் பகுதிகளில் படம் பிடித் துள்ளனர். இதற்காக சுமார் 2 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் அரங்குகளை அமைத்து படப் பிடிப்பு நடத்தியதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் ரொம்பவும் மேடானது. அங்கே செல்வதற்கு வாகன வசதிகள் எதுவும் கிடையாது. நான்கு கிலோ மீட்டர் எல்லோ ரும் எல்லா சாதனங்களையும் நடந்தே எடுத்துச்சென்று படமாக் கினோம். "'சவுகார்பேட்டை' படத்தில் இருந்த குறைகள் நிச்சயமாக 'பொட்டு' படத்தில் இருக்காது. இது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். படம் நிச்சயம் வரவேற்பைப் பெறும்," என்கிறார் இயக்குநர் வடிவுடையான்.