ராணுவப் பாதுகாப்புடன் நடந்த படப்பிடிப்பு

ராணுவப் பாதுகாப்புடன் நடந்த படப்பிடிப்பு

2 mins read
a427f9d8-2027-4855-a097-16cea2f0f5dc
-

'வாகா' படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்புடன் நடத்தி உள்ளனர். அப்படக் குழுவினர் செய்தியாளர் களைச் சந்தித்தபோது மேலும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு. 'வாகா'வில் இவருக்கு ஜோடி ரன்யா ராவ். ஜி.என்.ஆர்.குமர வேல் இயக்கத்தில் பால விசுவநாதன் தயாரித்துள்ள படம் இது. "காஷ்மீரில், இந்திய-பாகிஸ் தான் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் 69 நாட் கள் படப்பிடிப்பை நடத்தினோம். இது அழகான காதல் கதை. நான் எல்லைப் பாதுகாப்புப் படை வீரராக நடித்து இருக்கிறேன். எனக்கு ஜோடியாகக் காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணாக ரன்யா ராவ் நடித்துள்ளார்.

"இந்திய ராணுவத்தின் அனு மதியைப் பெற்று காஷ்மீரில் படப் பிடிப்பை நடத்தினோம். தமிழ்நாட் டின் உயர் காவல்துறை அதிகாரியாக இருந்த விஜயகுமார் தற்போது டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த அவர் பல உதவிகளைச் செய்தார்.

"25 ராணுவ வீரர்கள் எங்க ளுக்குப் பாதுகாப்பு அளித்தார்கள். அவர்கள் படப்பிடிப்பு நடைபெறும் போது கூடவே இருந்தார்கள். காலையில் தங்கு விடுதியில் இருந்து புறப்படுவது முதல் படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டு மாலையில் திரும்பும் வரை ராணுவ வாகனங்கள் பாதுகாப்பாக எங்களைப் பின் தொடர்ந்தன.

"ஒருநாள் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது தூரத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் தொடர்ந்து கேட்டது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டுத் தங்கு விடுதிக்குத் திரும்பும்படி ராணுவ வீரர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அதன் பிறகுதான் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை பற்றிய விவரம் தெரியவந்தது. "காஷ்மீர் மிக அழகான இடம். அங்கு தொடர்ந்து 69 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களில் நம் தமிழர்கள் நிறையப் போர் இருக்கிறார்கள். "கடைசி நாள் படப்பிடிப்பில் பாசத்தால் அவர்கள் எங்களைக் கட்டியணைத்து அழுதனர். அவர்களைப் பிரிய எங்களுக்குக் கஷ்டமாக இருந்தது," என்றார் விக்ரம் பிரபு.