'அலைகள் ஓய்வதில்லை' 2ஆம் பாகம்

'அலைகள் ஓய்வதில்லை' 2ஆம் பாகம்

1 mins read
7467f9a8-9c1d-45d6-ab25-944074736472
-

பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா நடிப்பில் 1981ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'அலைகள் ஓய்வதில்லை'. இப்படத்தில்தான் கார்த்திக், ராதா இருவருமே அறிமுகமானார்கள். அதன்பிறகு, தமிழ்ச் சினிமாவின் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வந்தனர்.

இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பாரதிராஜா ஆர்வம் காட்டி வருகிறார். காதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நாயகனாக இயக்குநர் வசந்தின் மகன் ரித்விக் வருண் அறிமுகமாகிறார். நாயகியாக நடிகர் லிவிங்ஸ்டன் மகளை அறிமுகம் செய்ய இருப்பதாகக் கேள்வி. விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.