சென்னை: பிரபல திரைப்பட நடிகை அமலா பாலும் அவரது கணவரும் இயக்குநருமான விஜய்யும் விவாக ரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்காக நேற்று காலை இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்துக்கு தனித்தனி காரில் வந்தனர். "எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடந் தது. ஓராண்டிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015 மார்ச் 3ஆம் தேதி முதல் பிரிந்து தனித்தனியாக வாழ் கிறோம். "கருத்துவேறுபாடு தொடர்பாக தீர்வு காணமுடியாததால் சேர்ந்து வாழ இனி வழியில்லை. எனவே பரஸ்பர விவாகரத்து கோருகிறோம். ஜீவனாம் சமோ சொத்துகளோ கேட்கவில்லை," என்று இருவரும் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை 6 மாதத்துக்கு ஒத்திவைத்தார்.
விவாகரத்து கோரி நடிகை அமலா பால் நீதிமன்றத்தில் மனு
1 mins read
-

