தனு‌ஷுக்கு ஜோடியாகும் ராதிகா ஆப்தே

தனு‌ஷுக்கு ஜோடியாகும் ராதிகா ஆப்தே

1 mins read
563b9911-03f6-4815-95c7-2058aabaec93
-

'கபாலி'யில் ரஜினியுடன் ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே அடுத்து அவரது மருமகன் தனு‌ஷுடன் ஜோடியாக நடிக்க உள்ளார். ரஜினி நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் 'கபாலி' படத்தில் ராதிகா ஆப்தேவின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 'ஜிகர்தண்டா', 'இறைவி' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.

இப்படத்தில்தான் ராதிகா ஆப்தேவை கதாநாயகியாக்கப் பேச்சு வார்த்தை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. இப்படம் அடிதடி, திகில் கலந்த படமாக உருவாகிறது. கார்த்திக் சுப்புராஜ் வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை இயக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.