நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்

நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்

1 mins read
31b479f9-a6b2-474f-9539-e28aa52e5f8e
-

நடிகைகள் சுவாதி, சுஷ்மாராஜ் ஆகிய இருவருக்கும் மாப்பிள்ளைகள் முடிவானதைத் தொடர்ந்து விரைவில் திருமணம் நடக்க உள்ளது. 'சுப்ரமணியபுரம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சுவாதி. 'கனிமொழி', 'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'வடகறி' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சுவாதிக்கு இப்போது 29 வயது ஆகிறது. இதையடுத்து அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அவருக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேர்வு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் சுவாதி வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கக்கூடும்.

நடிகை சுஷ்மா ராஜ் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவர் 'இந்தியா பாகிஸ்தான்' படத்தில் விஜய்ஆண்டனி ஜோடியாக நடித்தார். திரிஷாவுடன் 'நாயகி' படத்திலும் நடித்து உள்ளார். இந்நிலையில் தனது நீண்ட கால நண்பர் மீது காதல் வயப்பட்ட சுஷ்மா, அவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.