வெற்றியைப் பார்த்து தலைக்கனம் கொள்பவன் நானல்ல; ஒருவரின் காலை வாரிவிட்டு முன்னேறும் புத்தியும் எனக்கு கிடையாது. சக நடிகர்களின் படங்கள் வெற்றியடைவதை பார்த்து மகிழ்பவன் நான் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'தர்மதுரை'. இப்படம் வரும் 19ஆம் தேதி வெளியீடாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "தர்மதுரை படம் காதலும் உணர்வும் கலந்த ரோலர்கோஸ்டராக இருக்கும்.
ஒரு மனிதன் தனது வாழ்வின் மூன்று வித்தியாசமான காலகட்டங்களில் மூன்று பெண்களை காதலிப்பதுதான் கதை. "படத்தில் காதல் மட்டும் இல்லை. தாய்ப்பாசமும் உள்ளது. தாய்க்கும் மகனுக்குமான பாசத்தை விளக்கும் படம். மொத்தத்தில் 'தர்மதுரை' குடும்ப ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை," என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

