புதுப் படம் குறித்து விஷால் விளக்கம்

புதுப் படம் குறித்து விஷால் விளக்கம்

1 mins read
ea8896b1-6734-42e1-bdbd-9eb9f19c23ce
-

நடிகர் விஷால் தற்போது சுராஜ் இயக்கத்தில் 'கத்திச்சண்டை' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'இருமுகன்' படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிப்பில் விஷால் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் இந்தச் செய்திக்கு விஷால் தரப்பிலிருந்து இப்போது மறுப்பு வந்துள்ளது. சிபு தமீன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்கிறது விஷால் தரப்பு.

'கத்திச்சண்டை' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தின் மூலம் வடிவேலு நகைச்சுவை நடிகராக மறுபிரவேசம் செய்துள்ளார். வடிவேலுவுடன் சூரியும் நகைச்சுவையில் அசத்துகிறாராம். இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.