தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜீவாவுடன் நடிக்கிறார் லட்சுமி மேனன்

1 mins read
feca702b-6ea0-476e-90a8-a1666286665f
-

ஜீவாவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம் லட்சுமி மேனன். நடிகர் ஜீவா நடிப்பில் உருவான 'திருநாள்' படம் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து 'கவலை வேண்டாம்', 'சங்கிலி புங்கிலி கதவத்தொற' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. இதில் 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து ஜீவா நடிப்பில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்ற படம் உருவாகப் போவதாக அண்மையில் தகவல் வெளியானது. இப்படத்தை எம்.ஜே. அருண் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தின் நாயகியாக பிரபல நடிகை ஒருவரை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், லட்சுமி மேனன்தான் அந்த நாயகி எனத் தகவல் வெளியாகியுள்ளது. லட்சுமிமேனன் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'மிருதன்'. இப்படத்தை தொடர்ந்து 'சிப்பாய்', 'றெக்க' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.