'வடசென்னை' படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக ஆண்ட்ரியா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருந்தாலும், நட்பு அடிப்படையில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையில், இன்னும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லையாம். இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவி கதாபாத்திரம் வேறு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடைய மனைவியாக நடிப்பதற்கு ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனராம். ஏற்கெனவே, இப்படத்தின் நாயகியாக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். இப்போது ஆண்ட்ரியாவும் ஒப்பந்தமாகியுள்ளது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் எனக் கூறப்படுகிறது.
சேதுபதி மனைவியாக ஆண்ட்ரியா
1 mins read
-

