இருபதுகளில் இருக்கும் இளையர்களுக்கு ஸ்வேதா மேனனை தெரியாமல் இருக்கிறது. 'ரதி நிர்வேதம்' உள்பட பல படங்களில் கவர்ச்சியாக நடித்து இளைஞர்களின் மனம் கவர்ந்தவர். தனது பிரசவத்தையே படமாக்கி இந்திய அளவில் கவனிக்க வைத்தார். தமிழில் 'நான் அவனில்லை 2', 'துணை முதல்வர்' படங்களில் நடித்த ஸ்வேதா மேனனுக்கு நல்ல குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆசையாம். இப்போது தமிழில் நடிக்கும் 'இணையதளம்' படத்தில் அவர்தான் நாயகி. இதில் அதிரடி சண்டைக் காட்சிகள் அதிகமாம். ஸ்வேதா துப்பறியும் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். "என் மீது இந்த கவர்ச்சி முத்திரை ஏன் விழுந்தது என்றே தெரியவில்லை. என்னைவிட பலர் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள். எனக்கு கவர்ச்சி வேடங்களைவிட நல்ல மனதில் பதியும் வேடங்களில் நடிக்கவே ஆசை," என்கிறார் ஸ்வேதா.
நல்ல கதாபாத்திரங்களே விருப்பம் - ஸ்வேதா மேனன்
1 mins read
-

